மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் படகு ஸ்வீடனில் அறிமுகம்

0 1070

முழுக்க மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் பயணிகள் படகு ஸ்வீடனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பயணிகள் பறக்கும் படகு வணிக உற்பத்திக்குள் அடியெடுத்து வைத்து இருப்பதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பறக்கும் படகு இயக்கிய 16 வினாடிகளில் முழுவேகத்தை அடையும் என்றும் இதில் 30 பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என்றும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பறக்கும் படகின் இரண்டாவது மாடல் 2024 இல் ஸ்டாக்ஹோமின் நீர்வழிகளில் சேவையில் நுழையும் என்றும் அப்போது ஒரு படகு நகர மையத்திலிருந்து புறநகர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.

டீசலில் இயங்கும் படகுகளை விட பேட்டரியில் இயங்கும் இந்த வாகனம் விரைந்து செல்ல உதவும் என்றும் இதனால் பயண நேரம் குறையும் என்றும் அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments