இத்தாலி நடுக்கடல் விபத்தில் சிக்கி தவித்த 616 புலம்பெயர்ந்தோர் மீட்பு... 2 வயது சிறுமி பலி 8 பேர் மாயம்

0 843

இத்தாலி  தீவான லம்போடுசாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் சிக்கி  தவித்த புலம்பெயர்ந்தோர் 40 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர், இதில் 2 வயது சிறுமி ஒருவர் பலியானார் 8 பேர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று மற்றொரு படகில்  நடுக்கடலில்  சிக்கி தவித்த 576 புலம்பெயர்ந்தோரும் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தாலி கடல் வழியாக புலம் பெயர்ந்துள்ளதாக  இத்தாலி உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி அல்லது மால்டாவிற்கு  மத்தியதரைக் கடல் வழியாக கடந்து செல்வது உலகின் மிகவும் ஆபத்தான பயணம் ஆகும் .இந்த வழியில் பயணித்தவர்களில்   2,200 பேர் காணாமல் போய் இருப்பதாக இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments