மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 1040

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமை தொகை திட்டம், காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

நாமக்கல் பகுதிக்கு அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்செங்கோடு வருகை தந்த போது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பிலும், நகர திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் ராசிபுரம் அடுத்த போதமலைக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கு மலைவாழ் மக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவையை துவக்கி வைத்து 2 ஆயிரத்து 513 பயனாளிகளுக்கு 16கோடியே 52லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments