இராணிப்பேட்டையில் சாலை விரிவாக்கத்திற்காக கொட்டப்பட்ட மண் மேட்டினால் மோதி பலத்த காயங்களுடன் காவலர் உயிரிழப்பு

0 1559

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே, முறையான தடுப்புகள் இல்லாத மாற்றுச்சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் மேட்டில் மோதி தூக்கிவீசப்பட்ட காவலர், பலத்த காயங்களுடன், உயிருக்குப் போராடிய நிலையில், உதவிக்கு வருவார் யாருமின்றி, துடிதுடித்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, வீடு திரும்பியபோது, இந்த துயரச் சம்பவம் நேரிட்டுள்ளது.

காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த பிறகே, இளங்கோவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 11 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், அவரது 24 வயது மனைவி சந்தியா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments