சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு-சாமி தரிசனம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைக்காக சபரிமலை கோவில் கடந்த 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
பம்பா நதி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்பட எல்லா இடங்களிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க கோவில் திறப்பு மற்றும் சாமி தரிசனம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments