திரைப்படத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா டிச 23 ,24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், அஜித், விஜயக்கு அழைப்பு

0 2818

தமிழ் திரைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க உள்ளதாகவும், அஜித், விஜயை அழைக்க உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுவதாக கூறினார்.

விழாவுக்காக 20 நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளதாகவும், விழாவை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

கலைஞர் என்பது திரைத்துறை அவருக்கு வழங்கிய பட்டம் என்பதால் தமிழ் திரையுலகம் இந்த விழாவை எடுப்பதாக இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments