டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 1197

டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற அப்பல்கலைக்கழக விழாவில், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, கர்நாடக இசைக் கலைஞர் பி.எம். சுந்தரம் ஆகியோருக்கு முதலமைச்சர் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர், மற்றவர் கையில் இருந்தால் வேந்தர் பதவியின் நோக்கம் சிதைந்து விடும் என்பதற்காக இசைக் கவின்கலைப் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று அறிவித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டுவதாக கூறினார்.

துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தான் பாடகி சுசீலாவின் ரசிகன் என்று கூறிய முதலமைச்சர், சுசீலாவின் பாடல் ஒன்றின் சில வரிகளைப் பாடினார்.

தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். விழாவில் 981 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments