உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாறை இடிபாடுகள் இடையே ஆறு அங்குல குழாய் நேற்று வெற்றிகரமாகச் நுழைக்கப்பட்டது. அந்தக் குழாய் வழியே செலுத்தப்பட்ட கேமரா மூலம் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் படம் பிடிக்கப்பட்டதில், அவர்கள் நலமாக உள்ளது தெரியவந்துள்ளது.
வாக்கி டாக்கியும் அனுப்பப்பட்டு அவர்களுடன் மீட்புக் குழுவினர் பேசினர்.
அத்துடன், 10 நாட்களுக்குப் பிறகு குழாய் வழியே முதன்முறையாக அனுப்பப்பட்ட கிச்சடி உணவையும் அவர்கள் சாப்பிட்டனர்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இன்று காலை உணவாக அவர்களுக்கு உருளை-கொண்டைக்கடலை மசாலாவும், கிச்சடி, கோதுமை உணவும் தயாரிக்கப்பட்டன.
பூரியும் தயாரிக்கப்பட உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே, சுரங்கத்தின் மேற்பகுதி வழியே துளையிடும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments