சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே எதிர்திசையில் தவறான வழித்தடத்தில் வந்த மினி லாரி மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தனுஷ் என்ற இளைஞர் தலையில் காயமடைந்து உயிரிழந்தார்.
சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சந்தைமடம் என்ற பகுதி அருகே ஒருவழிப்பாதையில் வந்த மினி லாரி சாலையை கடக்க முயன்றபோது, விபத்து ஏற்பட்டு தனுஷ் தூக்கி வீசப்பட்ட காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மினி லாரி சரியான பாதையில் சென்று இருந்தாலே அல்லது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மெதுவாக வந்திருந்தாலோ ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments