பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 7 லட்ச ஏக்கர் தீயில் கருகின... தீயால் ஜாக்குவார் இனம் அழியும் அபாயம்
உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வனம் எரிந்து நாசமடைந்துள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இதுவரை 69 சதவீதம் சேதமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாண்டனாலின் பகுதி ஜாக்குவார் இனத்திற்கு புகலிடமாகவும் விளங்குவதால், அந்த இனம் முற்றிலும் அழிந்து விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் மட்டுமின்றி விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Comments