மணிப்பூர் இம்பால் விமானநிலையம் அருகே மர்மப் பொருள் பறந்து சென்றதால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
மணிப்பூரில் விமானநிலையம் அருகே அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுப் போன்ற மர்மப் பொருள் ஒன்று பறந்து சென்றதால் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் இம்பாலில் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டதாக விமானநிலைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பறக்கும் தட்டு போன்று காட்சியளித்த அந்த மர்மப் பொருளை விமானநிலையத்தின் மேற்கு நோக்கி நகர்வது வெறும் கண்களுடன் பார்க்க முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் தாமதமாக வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, ரேடார் பதிவுகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, மர்மப் பொருளைக் கண்டறியும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Comments