ரூ.3.50 கோடிக்கு லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து குறைந்த விலைக்கு விற்று மோசடி..!!
சென்னையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து, குறைந்த விலைக்கு விற்றதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடம் பல்லாவரத்தை சேர்ந்த தினேஷ்லிங்கம் என்பவர் 520 லேப்டாப்களை வாங்கிச் சென்றுவிட்டு வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் லேப்டாப்புகளை விற்றதாக தினேஷ்லிங்கம் மீது பிரேமலதா அளித்த புகாரில், போலீசார் தினேஷ் லிங்கத்தைக் கைது செய்தனர். போலீஸ் விசராணையில் 80 லட்சம் ரூபாய் மதிப்புடைய லேப்டாப்களை அவர் விற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
Comments