ஓடும் காரில் எட்டிப்பார்த்த பாம்பு.. பதறி அடித்து ஸ்விப்ட் காரை கழட்டி பார்த்தால் காத்திருந்த டுவிஸ்ட்..!

0 3204

ஓடும் காரில் எட்டிப்பார்த்த பாம்பை கண்டு மிரண்டு போன ஓட்டுனர் , சாலையோரம் காரை நிறுத்தி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், 2 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் மெக்கானிக்குகளை அழைத்து நல்லா இருந்த காரை , பார்ட் பார்ட்டாக கழட்டி வீசும் நிலை ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் தனக்கு சொந்தமான மாருதி சுசுகி ஷிப்ட் சொகுசு காரில் சகோதரர் மணிகண்டனை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு தனது காரை பழுது பார்ப்பதற்காக சென்றார். காரை மணிகண்டன் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதுப்பேட்டை பகுதியில் கார் சென்றபோது காரின் உள்பக்கம் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு ஒன்று தலையை நீட்டியபடியே டக்கென்று வெளியே வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் காரை சாலையின் ஓரம் அவசரமாக நிறுத்தி விட்டு இறங்கி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் பாம்பை தேடத்தொடங்கினர்

தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மெக்கானிக்குகளை வரவழைத்து காரை பல பாகங்களாக பிரித்து போட்ட பின்னரும் காருக்குள் பாம்பை காணவில்லை

தண்ணீரை பீய்ச்சி அடித்து பாம்பை பிடிக்கும் நூதன முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் எங்கோ பதுங்கிக் கொண்டது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

பழுது பார்க்க சென்ற வழியில் பார்ட் பார்டாக காரின் உள்பாகங்கள் கழற்றப்பட்டதால் காரை எடுத்துச்செல்லலாமா? வேண்டாமா ? என்று தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ராஜேந்திரன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments