மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கத்தக்கது.. ஒருபோதும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்: நடிகை திரிஷா
லியோ படத்தில் திரிஷாவுடன் பாலியல் பலாத்கார காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக மன்சூர் அலிகான் கூறியிருந்த கருத்து பாலியல் ரீதியானது மற்றும் பெண்களுக்கு எதிரானது என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
இதுவரை அத்தகைய நபருடன் ஒரே காட்சியில் ஒன்றாக நடிக்காதது நிம்மதி தருவதாகவும், திரைத்துறையில் தாம் இருக்கும் வரை மன்சூருடன் சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள திரிஷா, மன்சூரைப் போன்றோர் மனித குலத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துபவர்கள் என்றும் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments