ஆத்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த காருக்குள் நான்கடி நீள பாம்பு... ஓட்டம் பிடித்த சகோதரர்கள்

0 4476

ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில், ஓடிக்கொண்டிருந்த காருக்குள் பாம்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காரை பார்ட் பார்ட்டாக பிரித்து தேடியும், பாம்பு கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

மணிகண்டன் என்பவர் தனது சகோதரர் ராஜேந்திரனுடன், மாருதி சுசுகி ஷிப்ட் காரை பழுது பார்ப்பதற்காக ஓட்டிச்சென்ற போது, காரின் ஸ்டியரிங்கின் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு எட்டிப்பார்த்துள்ளது.

அதிர்ச்சியடைந்த இருவரும் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, அவசரமாக வெளியேறியதுடன், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு, காரை தனித்தனியாக பிரித்து மேய்ந்த போதும் பாம்பு கிடைக்கவில்லை என்பதால், அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments