என்னடா இப்படி இறங்கிட்டீங்க..? கூலிக்கு குழந்தையை கடத்த சென்று கும்பலாக போலீசில் சிக்கிய கூலிபான்ஸ்..! காட்டிக் கொடுத்தது சிசிடிவி வீடியோ

0 1790

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அம்மன் நகர் பகுதியில் வீடுபுகுந்து குழந்தையை கடத்த முயன்ற சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியான நிலையில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீராம். இவரது மகள் சௌமியாவுக்கும் நடுவலூரைச் சேர்ந்த குணாளன் என்பவரது மகன் ராஜிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் சௌமியா கணவரைப் பிரிந்து ஓராண்டாக அவரது அம்மன் நகர் பகுதியில் பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு மர்ம ஆசாமிகள் சிலர் சவுமியாவின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. சவுமியா அந்த கும்பலை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டிலிருந்த சவுமியாவின் தந்தை வெளியே வருவதை கண்டதும் அந்த கும்பல் குழந்தையை தூக்காமல் விடமாட்டோம் என்று கூறி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து சிசிடிவி ஆதரங்களுடன் ஆத்தூர் நகர போலீசில் சவுமியா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கடத்த கூலிப்படையினரை அனுப்பி வைத்தது அவரது கணவர் ராஜி மற்றும் மாமனார் குணாளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 10 பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆத்தூர் நகர போலீசார் பெத்தநாயக்கன்பாளையம் கூலிப்படை கும்பலை சேர்ந்த பிரதீப், சௌந்தர்,தனசேகரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments