ஒடிஸாவில் புரி கடற்கரையில் 56 அடி நீள கிரிக்கெட் உலகக் கோப்பை மணல் சிற்பம்
ஒடிஸாவில் புரி கடற்கரையில் 56 அடி நீள கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவிலான மணல் சிற்பத்தை மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
அகமதாபாத்தில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
இதில், இந்தியா வெற்றிபெற்று மூன்றாவது முறையாக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று வாழ்த்தி குட்லக் இந்தியா டீம் என்ற வாசகங்களுடன் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உதவியுடன் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் 300 கிரிக்கெட் பந்துகளைக் கொண்டு ஆறு மணி நேரம் செலவிட்டு இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
Comments