மணிப்பூர் வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க கவுகாத்தியில் முகாமிட்டிருந்த தேசிய மனித உரிமை ஆணையத்தினர், மணிப்பூர் மாநிலத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 4 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டனர்.
மணிப்பூர் மாநிலம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடைகளை அகற்றுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மணிப்பூரின் சில பகுதிகளில் இன்னும் வன்முறை தொடர்வதாகக் குறிப்பிட்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தினர், கலவரத்தின்போது சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பது தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Comments