அனுமாரு வந்திருக்காரு.. வாயால் தேங்காய் உரித்த வடக்கு பாய் அவதாரம்..!
திருப்பூர் மாவட்டம் , அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் உள்ள ஆஞ்சிநேயர் சன்னதிக்கு சாமி கும்பிட வந்த வட மாநில இளைஞர் ஒருவர் குரங்கு போல வாயால் தேங்காய்களை உரித்து தலையில் ஊற்றிக் கொண்டு ஹிந்தியில் அருள் வாக்கு சொன்ன நிலையில் , அனுமாரே அருளால் இறங்கி வந்திருப்பதாக எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்தனர்
இந்த பையன் செய்யற சேட்டையை பார்க்கும் போது கிங் காங் மாதிரி இருந்தாலும், இவர் இந்த சேட்டையை செஞ்ச இடம் ஆஞ்சனேயர் சன்னதி என்பதால் இவரை பக்தர்கள் பரவசத்துடன் செல்போனில் படம் பிடித்தனர்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஏராளமான பக்தர்கள் சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்த போது அங்குள்ள கார்ய சித்தி ஆஞ்சிநேயர் கோவில் முன்பு வைத்திருந்த இளநீர் மற்றும் தேங்காய்களை பல்லால் கடித்து உரித்த வட மாநில இளைஞர் ஒருவர், அந்த தேங்காய் தண்ணீரை தனது தலையில் ஊற்றிக் கொண்டு கிங் காங் படத்தின் கிளைமேக்ஸில் காங் சவால் விடுவது போல சைகை காட்டினார்
கூடியிருந்த பக்தர்கள் அனுமாரே அருள் வாக்கு சொல்ல அவர் மீது வந்து இறங்கி இருப்பதாக கூறி பரவசம் அடைந்து , கையெடுத்து கும்பிட்டனர், சிலர் அந்த இளைஞர் செய்த சேட்டைகளை வேடிக்கையாக தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்
10 தேங்காய்களை உறித்து தலையில் அபிசேகம் செய்து கொண்ட பின்னர் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார் அந்த இளைஞர்.
Comments