உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க 6வது நாளாக தீவிர முயற்சி
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை கட்டுமானத்தின் போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
சில்க்யாரா மற்றும் பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த நான்கரை கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணிகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
விமானப்படை விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட அதிநவீன செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரம் மூலம் பணிகள் வேகமாக நடைபெறுவதால் தொழிலாளர்கள் விரைவில் மீடக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு உதவி செய்து வருகின்றனர். சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு பிராண வாயு மற்றும் தீரவ உணவு குழாய்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
Comments