டெல்லியில் காற்று மாசுபாட்டின் நிலை மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக வானியல் மையம் எச்சரிக்கை

0 1736

டெல்லியில் காற்று மாசுபாட்டின் நிலை மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக வானியல் மையம் எச்சரித்துள்ளது. 

அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் வேளாண் கழிவுகளை தீயிட்டு எரித்ததால் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இல்லாத நிலையில், தட்ப வெப்பமும் குறைவாக உள்ளதால் காற்றின் தரக் குறியீடு 420 என்ற அளவுக்கு கீழே சென்றுள்ளது.

இந்தளவுக்கு மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசித்தால், ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி, இதய நோய் போன்றவை ஏற்படும் என்றும் மனிதர்களின் ஆயுளே கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரை குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் ஒன்று விட்டு ஒரு நாள் இயக்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வர டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, பதிவு எண்ணின் கடைசி இலக்கம் ஒற்றைப் படையில் உள்ள வாகனங்கள் முதல் நாளும், இரட்டைப் படை வண்டிகள் மறு நாளும் மாற்றி மாற்றி இயக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments