ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை; விமானப் பணியாளர் கைது

0 1532

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துசென்ற போது அங்கிருந்த கிராம மக்கள் அவரை தாக்க முயன்றனர்.

விசாராணைக்கு பின், பிரவீனை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கிருந்தவர்களை தடியடி நடத்தி போலீசார் அப்புறப்படுத்தினர்.

ஏற்கனவே திருமணமானதை மறைத்து, பிரவீன் சக பெண் பணியாளர் அய்நாஸ் என்பவருடன் நெருங்கி பழகிவந்துள்ளார். இது தெரிய வந்ததையடுத்து அப்பெண் விலகத்தொடங்கியுள்ளார்.

அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அய்நாஸை கொலை செய்யச் சென்ற பிரவீன் மொத்த குடும்பத்திரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments