கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

0 1907

கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மற்றும் ரகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

திருவள்ளூரில் தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ள ஐயப்பன் சந்நதியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருசாமியின் கைகளால் மாலை அணிந்து கொண்டனர். மாலை அணிந்து கருப்பு நிற உடையுடன் தவழந்தபடி வந்த குழந்தை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடகினர்.

 

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயில், புதூர் ஐயப்பன் கோயில், சோழவந்தான் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரண்ட பக்தர்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments