ஸ்விக்கியில் ஆர்டர் செய்து குழந்தைக்கு உணவு ஊட்டிய தாய்... சாப்பாட்டில் கிடந்த போதை பொருள்.! இப்படித்தான் சாப்பாடு செய்றீங்களா ?
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கீதா ஓட்டலில் இருந்து ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் என்ற புகையிலை பொட்டலம் கிடந்தது தெரியாமல், குழந்தைக்கு சாப்பிட்ட கொடுத்ததால் உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதாக தாய் புகார் அளித்துள்ளார்.
சைவ சாப்பாட்டிற்குள் குட்டி தலையணை போல கிடக்கும் இந்த பொருள் தான் கூல் லிப் எனப்படும் போதை வஸ்து என்கிறார் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்..!
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண் , அங்குள்ள பிரபல உணவகமான கீதா கேண்டினில் இருந்து பிற்பகல் உணவை ஸ்விக்கி காம்போ ஆஃபர் மூலம் ஆர்டர் செய்து உள்ளார். அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட துவங்கி உள்ளனர்.
திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின், அதனை எடுத்துப் பார்த்துள்ளார் அது பள்ளிக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில இளைஞர்கள் பயன் படுத்தும் கூல் லீப் என்ற போதைப்பொருள் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு. அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி உணவில் எவ்வாறு இது போன்ற போதை பொருட்கள் வந்தது என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுவாகவே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும் பெற்றோர்கள் உணவு பொருட்கள் வந்தவுடன் அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் இல்லையென்றால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாதிக்கப்பட்ட தாய் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட கீதா ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில் அதிக்காரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
சமையல் அறையில் இருந்த ஊழியர்களிடம் கூல் லிப் போடும் பழக்கம் உள்ளதாக என்றும் விசாரித்தனர். ஓட்டலில் நடந்த ஆய்வில் பெரிய அளவில் எந்த கெட்டுப்போன பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றாததால் நடவடிக்கை மேற்கொள்ளாமல் திரும்பினர். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்க குழந்தையின் தாய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments