காஷ்மீரில் கிருஷ்ணன் கோயில் அருகே மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் கோயில் லேசாக சேதம்

0 830


காஷ்மீரில் கிருஷ்ணன் கோயில் அருகே மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் கோயில் லேசாக சேதமடைந்தது.

பூஞ்ச் மாவட்டத்தில் சூரன்கோட் நகரில் கிருஷ்ணன் கோயில் அருகே நேற்றிரவு மர்மப் பொருள் வெடித்த போது சத்தமும் ஏற்பட்டது. இதனால் கோயிலின் சுவர்களில் துளைகளும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளது.

வெடித்த பொருள் கையெறி குண்டாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த வெடிப்பு குறித்து காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments