ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யும் நடைமுறை 2027ஆம் ஆண்டுக்குள் அறிமுகம்
ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யும் நடைமுறையை 2027ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆண்டுதோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோமீட்டர்களுக்குப் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் இரு முனைகளிலும் இஞ்சின்களை பொருத்தி, "புஷ் அண்டு புல்" என்ற தொழில்நுட்பம் மூலம் வேகத்தை அதிகரிப்பதால், பயண நேரம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments