நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததாக... சமூக வலைதளத்தில் பதிவிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஹூவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், உதகையில் உள்ள முதுமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் ஜோசப் ஹூவர் ஆஜரானார்.
பல்லுயிர் சூழலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் புலிகள் இறப்பு குறித்து பேசவோ, பதிவிடவோ கூடாது என வனத்துறையினர் தன்னை எச்சரித்ததாக ஜோசப் ஹூவர் கூறினார்.
Comments