இந்தியாவின் மிசோரமில் மியான்மர் மக்கள் 5,000 பேர் அகதிகளாகத் தஞ்சம்
உள்நாட்டு போரால் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்ர் நாட்டு மக்கள் சுமார் 5,000 பேருக்கு மிசோரம் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்திற்கு எதிராக பல்வேறு சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.
கடந்த மாத இறுதியில் 3 போராளி குழுக்குள் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளையும், சில நகரங்களையும் கைப்பற்றின.
தாக்குதலுக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் 39 பேர் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி செல்ல முடியாத சூழல் உள்ளதாக கூறி மிசோரமிலேயே தங்கியுள்ளனர்.
Comments