அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் அபெக் உச்சி மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
நேற்று மாலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தனி விமானம் மூலமாக ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டார்.
நீண்ட காலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடித்த வர்த்தகப் போட்டிகள், பொருளாதாரத் தடைகள், தைவான் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முரண்கள் மற்றும் அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூன் காரணமாக பனிப்போர் நீடித்து வந்தது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக இருதலைவர்களும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.
Comments