விமான பயணிகளின் கவனத்திற்கு.. உள்நாட்டு விமானங்களை இயக்கும் டெர்மினல்களில் புதிய மாற்றம்..! 15 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள்..

0 2409

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்  இன்று முதல் அமலுக்கு வருகிறது. விமானப் பயணிகள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல் என்னென்ன? இப்போது பார்க்கலாம்.. 

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் புதன்கிழமை காலை 9 மணி முதல் அமலுக்குவருகிறது.

இனிமேல், முதல் முனையத்திலிருந்தும், 4வது முனையத்திலிருந்தும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உள்நாட்டு முதல் முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா விமானங்கள் இயக்கப்படுகிறது

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்காவது முனையத்தில், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் முனையத்திற்கும், 4வது முனையத்திற்குமான தொலைவு 1 கிலோ மீட்டர் என்பதால் பயணிகள் ஒருவேளை மாறிச்சென்றால், விமானத்தை தவறவிட வாய்ப்புள்ளது.

விமான நிலையத்திற்குள் இரு முனையங்களுக்கும் இடையே தொடர்பு பாதை இல்லை என்பதால் பயணிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முனையத்திலிருந்து இன்னோரு முனையத்திற்கு நடந்து செல்ல 15 நிமிடங்கள் ஆகும் என்பதால், பேட்டரியில் இயங்கும் கார் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், வழக்கத்தைவிட 15 நிமிடங்கள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த மாற்றத்தால், கூடுதல் எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் சென்னை விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments