இத்தாலியில் காதலியை 57 முறை கத்தியால் குத்திய நபர் ஒரே ஆண்டில் 80 கிலோ உடல் எடை அதிகரித்ததால் விடுதலை செய்த நீதிமன்றம்

0 2425

ரொட்டியை சாப்பிடும் போது கீழே இறைத்ததால் ஏற்பட்ட தகராறில் காதலியை 57 முறை குத்திக் கொன்ற நபர் சிறையில் குண்டாகிக் கொண்டே போனதால், அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இத்தாலியில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.

2017-இல் இத்தாலியில் உள்ள சர்தினியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது காதலி எரிகாவை கொன்ற திமித்ரி ஃபிரிகேனோவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா காரணமாக அவர் 2022-இல் தான் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோவாக அதிகரித்தது.

உடல் எடையை குறைக்கும் வகையில் தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி  திமித்ரி தொடுத்த வழக்கை விசாரித்த டூரின் நீதிமன்றம், சிறையில் அவருக்கு கலோரிகள் குறைவான சிறப்பு உணவை வழங்க வழியில்லை என்பதால், அவரது பெற்றோர் இல்லத்திலேயே வீட்டுக் காவலில் இருந்து டயட் உணவை உட்கொள்ள அனுமதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments