அமெரிக்காவை சேர்ந்த ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஹெலிகாப்டர் போன்ற மின்சார ஏர் டாக்ஸி உருவாக்கம்
அமெரிக்காவை சேர்ந்த ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஹெலிகாப்டர் போன்ற மின்சார ஏர் டாக்ஸியை வடிவமைத்துள்ளது. பரிசோதனை முயற்சியாக அந்த ஏர் டாக்ஸியை நியூ யார்க் நகரில் வானில் பறக்கச் செய்து சோதனை நடத்தப்பட்டது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சாலையில் செல்ல அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்ற நிலையில், மின்சார ஏர் டாக்ஸி 7 நிமிடங்களிலேயே சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்தமின்றி அமைதியாக பறக்கும் மின்சார ஏர் டாக்ஸி, பைலட் உட்பட 5 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments