சீனாவில் குளிர் காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் குளிர் காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் விடுத்துள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயை எதிர்த்துப் போராடும் திறன் பொதுமக்களிடம் குறைந்து வருவதாகவும், எனவே தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
அதோடு பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் வயதானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments