சாதாரண காய்ச்சல்னு ஸ்டான்லிக்கு போனால் எலிக்காய்ச்சல் கன்ஃபார்ம்..?! எலி மேயும் கேண்டீன் பலகாரங்கள்

0 4424

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜியை எலி ஒன்று சாவகாசமாக சாப்பிடுவதைக் கண்ட நோயாளிகளின் உறவினர்கள் கேண்டீன் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இடம், சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த அரசு மருத்துவமனை உயர் தரத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், பராமரிப்பு மற்றும் பிற சேவைகள் மருத்துவத்திற்கு நிகராக இல்லை என்பது நோயாளிகளின் கருத்து.

இந்நிலையில், மருத்துவமனையின் உள்ளே தனியார் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் கேண்டீனில் பஜ்ஜி, வடை போன்ற திண்பண்டங்கள் மீது எலி ஒன்று ஏறி விளையாடி சாப்பிடும் வீடியோ வெளியாகி உள்ளது.

எலி விளையாடும் வீடியோ எடுக்கப்படுவதைப் பார்த்ததும், அதனைக் கம்பெடுத்து விரட்டினார் கேண்ட்டீன் ஊழியர் ஒருவர்.

கேண்டீனுக்கு சென்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் எலி சாப்பிட்ட பலகாரங்களை எப்படி விற்பனை செய்யலாம் ? இதை சாப்பிட்டால் இன்னும் நிறைய நோய்கள் வருமே ? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உஷாரான கேண்டீன் ஊழியர் அந்த வடை, பஜ்ஜிகளை ஒரு பையில் போட்டு அப்புறப்படுத்தினார்

கேண்டீன் ஊழியர் இந்த பலகாரங்கள் விற்பனைக்கு அல்ல என்று சமாளித்தாலும், நோயாளிகள் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டதாகவும், எலி விவகாரம் தனது கவனத்திற்கு வந்த உடன் அந்த கேண்டீனை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஸ்டேன்லி டீன் பாலாஜி தெரிவித்தார்

ஊரெங்கும் ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மருத்துவமனை கேண்டீன்களிலும், சுழற்சி முறையில் ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments