"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்னையில், கஞ்சா போதையில் தாய் கண்முன்பே தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது
சென்னையில், கஞ்சா போதையில் தாய் கண்முன்னே தந்தையை குத்திக் கொலை செய்த மகன், போதை தெளிந்ததும் ஜாமீன் எடுக்க அப்பா வரவில்லையா என போலீஸாரிடம் கேட்டுள்ளார்.
சாலிகிராமத்தைச் சேர்ந்த காவலாளியான அந்தோணி தாஸ், விருகம்பாக்கத்திலுள்ள தனது மூத்த மகன் வீட்டிற்கு மனைவி ஜோஸ்பினுடன் சென்ற போது, அங்கு அவர்களின் இளைய மகன் வினோத்தும் வந்துள்ளார்.
அப்போது, கஞ்சா போதையில் அக்கம்பக்கத்தினரிடம் வினோத் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதை அந்தோணி தாஸ் கண்டித்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதில் அந்தோணி தாஸ் உயிரிழந்தார். தலைமறைவான வினோத்தை போலீஸார் கைது செய்தனர்.
Comments