கொலைக் குற்றவாளி ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்ததால் பொது மன்னிப்பு வழங்கிய ரஷ்ய அதிபர் புதின்
முன்னாள் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற நபருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கினார்.
சைபீரியாவின் விளாடிஸ்லாவ் கான்யூஸ் என்ற அந்நபர், தன்னை பிரிந்து செல்வதாகக் கூறிய காதலியை ஓராண்டுக்கு முன் குத்திக் கொன்றார்.
17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட அண்மையில் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கி ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ராணுவ உடையுடன் கான்யூஸ் இருக்கும் படத்தைப் பார்த்து மனமுடைந்துவிட்டதாக கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
Comments