ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் பதிவு

0 1154

ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இயற்கையான வெண்ணீர் ஸ்பாக்கள், ஆடம்பர ஹோட்டல்கள் நிறைந்த பிரபல சுற்றுலா தலமான ப்ளூ லகூன் அருகே உள்ள கிரிண்டாவிக் என்ற இடத்தில் நிலநடுக்கங்கள் பதிவாயின.

தொடர்ச்சியான நிலநடுக்கங்களை அடுத்து, எந்நேரமும் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கிரிண்டாவிக் கிராமத்தில், எரிமலையை ஒட்டி வசிக்கும் சுமார் 4 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ப்ளூ லகூன் சுற்றுலாத் தலமும் மூடப்பட்டது. அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இதுவரை ஐஸ்லாந்தில் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments