தரக்குறைவான பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி 200 பேர் உயிரிழக்கக் காரணமான இதய நோய் சிகிச்சை நிபுணர் கைது
தரக்குறைவான பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி 200 பேர் உயிரிழக்கக் காரணமான இதய நோய் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் உள்ள மருத்துவப் பல்கலையில் இதய நோய் நிபுணராக இருந்தவர் சமீர் ஷராஃப். 2017 முதல் 2021-ஆம் ஆண்டுக்குள் 600 பேருக்கு தரக்குறைவான பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நோயாளிகள் தரப்பில் இருந்து பல்கலைக் கழகத்துக்கு நிறைய புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதும், பேஸ்மேக்கர் வாங்கியதில் சமீர் ஷராஃப் நிதி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
எடாவா பகுதியைச் சேர்ந்த முகம்மது நசீம் என்பவர், டாக்டர் சமீர் 4 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு மனைவிக்கு தவறான முறையில் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தியதாகவும், அவரது அலட்சியத்தில் மனைவி உயிரிழந்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Comments