சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உதவியாளருக்குக் காயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

0 4842

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ராதாகிருஷ்ணன் காரிலிருந்து இறங்குவதற்காக அவரது உதவியாளர் கதவை திறக்க முயன்றுள்ளார்.

அதனையறியாத ராதாகிருஷ்ணன், தானே கதவைத் திறந்து இறங்க முயன்றுள்ளார். இதனால் வாகனத்தின் கதவு மோதி கீழே விழுந்த ராமனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தனது காரிலேயே ராமனை அமரவைத்து, அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படும் நிலையில், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments