தைவானில் தொழிற்சாலைகள், பண்ணைகள், மருத்துவமனைகளில் இந்தியர்களுக்குப் வேலை வாய்ப்பு
தொழிலாளர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தைவான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனியார் தொழில்நுட்ப அமைப்பான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவானில் உள்ளூர் மக்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் இந்தியர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments