பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசு காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள், பூங்காக்கள் மூடல்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசு காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள், பூங்காக்கள் மூடப்பட்டன.
அந்நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட லாகூர் நகரத்தில் காற்றின் தரக்குறியீட்டெண் 400க்கு மேல் அதிகரித்ததால் பள்ளிகள், பொதுப் பூங்காக்கள், மால்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலைமை சீராகும் வரை குஜ்ரன்வாலா, ஹபிசாபாத் மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் மாகாணத்தில் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments