கனடாவில் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரிப்பு என இந்தியா புகார்
கனடாவில் காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட்ஸ் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் ஆகியோர் நேற்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து அமெரிக்க அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது கனடாவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் வினய் கவாட்ரா அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
Comments