உக்ரைன் போரினால் ஹெலிகாப்டர் எஞ்சின்களைத் திரும்பப் பெற எகிப்து, பாகிஸ்தானிடம் ரஷ்யா பேச்சுவார்த்தை
பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய ஹெலிகாப்டர் என்ஜின்களை திருப்பித் தருமாறு ரஷ்யா கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ஓராண்டையும் கடந்து நீடித்து வருவதால், ரஷ்யா ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் பற்றாக்குறையுடன் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் மோதலில் ரஷ்யா ஈடுபட்டதன் விளைவாக ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் தேவை அதிகரித்துள்ளது. இது உலகளாவிய சந்தையில் பீரங்கிகளின் விலைகளில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
தற்போது, உக்ரைனுடனான மோதலில் பயன்படுத்த பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து தனது ஹெலிகாப்டர் என்ஜின்களை ரஷ்யா திரும்பக் கோருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக பாகிஸ்தான் மட்டுமின்றி, எகிப்து, பெலாரஸ், பிரேசில் ஆகிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Comments