கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் தவிர்த்து வரும் கிராம மக்கள்.. காரணம் என்ன...?
கடன் பிரச்சினையால் தவித்த காலகட்டத்தை நினைத்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
விளாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, வலையபட்டி, கிளுகிளுப்பைபட்டி, அச்சம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு காலத்தில் தீபாவளிக்கு கடன் வாங்கித் திணறியதால் இனி அந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று 1954-இல் பெரியவர்கள் ஊர் மந்தையில் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது முதல் தீபாவளியை கொண்டாடாமல் பொங்கல் விழாவை மட்டும் கொண்டாடி வருவதாக அக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments