காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிடும் - பிரதமர் மோடி விமர்சனம்

0 2704

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர், சத்னா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் செல்லும் இடமெல்லாம் அழிவு ஏற்படுவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியிடம் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்றும், அக்கட்சி மீது இளைஞர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை அனுபவித்து வந்த போலி பயனாளர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் உத்தரவாதங்களில் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments