தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை - அண்ணாமலை
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சியில் என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பின் பேசிய அவர், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடிகளிலும் வெட்ட வெளிகளிலும் படிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், போராடும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கவும் அரசு மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுத்தமான நீர் நிலையே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, கூவம், தாமிரபரணி, நொய்யல் போன்ற ஆறுகளைத் தொடர்ந்து ராஜ ராஜ சோழன் வெட்டிய உய்யக்கொண்டான் கால்வாயும் கழிவுநீர் தொட்டியாக மாறி இருப்பதாக கூறியுள்ளார்.
முன்னதாக, திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.
Comments