கொலை வழக்கு.. ஜாமீனில் வெளியே வந்து போலீசிடம் சிக்காமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்.. திருமண அழைப்பிதழால் மீண்டும் சிக்கிய சம்பவம்..!

0 3838

கடலூரில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து போலீசிடம் சிக்காமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர், உறவினர் ஒருவர் அச்சடித்த திருமண அழைப்பிதழால் போலீசில் சிக்கினார்.

2014-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 2015-இல் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானர்.

அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்து வந்ததை நம்பாமல் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர் ஒருவரது திருமண அழைப்பிதழில் கணேஷின் பெயர் இடம் பெற்றிருந்ததால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், கணேஷ் திருப்பதிக்கு சென்று, அங்கு காதல் திருமணம் செய்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் வசித்து வருவது தெரிய வந்ததை அடுத்து, அங்குச் சென்று போலீஸார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments