அமெரிக்காவில் பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மூலம் எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வு

0 2792

பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மூலம் எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பன்றிகளின் ரத்தத்திலிருந்து பெறப்படும் இளம் பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களைக் கொண்டு, வயதான எலிகள் மீது E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சை  அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சிகிச்சை எலிகள் மீது 70 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிகிச்சையின் போது, எலியின் மரபணுவில் நம்பமுடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி, வயதைப் பாதியாகக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments