தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று அக்கட்சியின் - அண்ணாமலை
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் 56-வது நாள் என் மண், என் மக்கள் யாத்திரையின் இடையே பேசிய அவர், தமிழகத்தில் கோயில்களுக்கு வெளியே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்புப் பதாகைகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து திருவெறும்பூரில் யாத்திரை மேற்கொண்ட பின் பேசிய அண்ணாமலை,பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 30 மாதங்களில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூரில் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் கட்சிக் கொடி ஏந்தி வரவேற்பளித்தனர்.
Comments