பஞ்சாப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

0 2272

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 38 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லை அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள் கடத்தல் அதன் பின்னணியில் உள்ள நிறுவனங்கள், உரிமையாளர்கள் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.அந்த வழக்கின் அடிப்படையில் நேற்று நடைபெற்ற சோதனைகளில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டமுக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments